News August 26, 2024

தருமபுரியில் தமிழ்புதல்வன் திட்டத்தின் மூலம் 7,033 பேர் பயன்

image

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து கல்லூரி சேரும் மாணவர்களுக்காக மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், தருமபுரி மாவட்டத்தில் 68 கல்லூரிகளில் படிக்கும், 7,033 மாணவர்கள் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும், மாணவர்கள் இத்தொகையினை அவர்களது கல்வித் தேவைக்கு பயன்படுத்த வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 10, 2026

தருமபுரி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (9.3.2026) இரவு முதல் இன்று (10.3.2026) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 9, 2026

தருமபுரி: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு<> pmjay.gov.in <<>>இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 9, 2026

தருமபுரி: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் வேலை!

image

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு<> கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணி வேலை தேடுவோருக்கு உதவி பண்ணுங்க.

error: Content is protected !!