News March 2, 2025
தருமபுரியில் தக்காளி விலை தொடர்ந்து சரிவு

தருமபுரி உழவர் சந்தையில் கடந்த 22ஆம் தேதி அன்று ஒரு கிலோ ரூ.18க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.8 க்கு விற்பனையானது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு உழவர் சந்தையில் இருந்து கோயம்பேடு, மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதில், 15 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி, ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனையானது.
Similar News
News April 6, 2026
தருமபுரியில் தவாக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு

தருமபுரியில் தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் பிரசாந்துக்கு ஆதரவாக, நிர்வாகிகள் சீனிவாசன், கோகுல் ஆகியோர் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் சாலையில் பட்டாசு வெடித்தனர். இதுகுறித்து வெள்ளை கவுண்டன்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில், தருமபுரி நகர போலீசார் கட்சி நிர்வாகிகள் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 6, 2026
தர்மபுரி இரவு ரோந்து பணி காவலர் விவரம்

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.5) இரவு முதல் இன்று (ஏப்ரல்.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News April 5, 2026
தருமபுரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க


