News September 4, 2025

தருமபுரியில் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.10 கோடி கடன்.

image

தருமபுரி மாவட்டத்தில், மகளிரைச் சுயதொழில் தொடங்க ஊக்குவிக்கும் வகையில், பரோடா வங்கி சார்பில் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (செப்.3) நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் இயங்கி வரும் 300-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு, ரூ.10 கோடி மதிப்பிலான கடனுதவி ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், ஆதரவற்றோருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Similar News

News November 14, 2025

தருமபுரி: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு..

image

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கவும். வேலை தேடுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News November 14, 2025

தருமபுரி இளைஞர்கள் கவனத்திற்கு..

image

தமிழக அரசின் திட்டத்தின் கீழ் படித்த வேலையற்ற இளைஞர்கள் வணிகம் தொடங்க ரூ.15 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று, அதற்கு 25% மானியம் (அதிகபட்சம் ரூ.3.75 லட்சம்) பெறலாம். என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மளிகை, பெட்டிக் கடை, பேன்சி ஸ்டோர், மொபைல் கடை, வாகன உதிரிபாகங்கள் ஆகிய தொகுதிகள் செய்ய கடன் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மேலே படத்தை பார்க்கவும் .

News November 14, 2025

தருமபுரி: லாரி கவிழ்ந்து விபத்து!

image

தருமபுரி, பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதில் ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி பாப்பாரப்பட்டி அருகே நேற்று (நவ.13) காலை மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், முத்தம்பட்டியை சேர்ந்த டிரைவர் ரமேஷ் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!