News August 14, 2024
தருமபுரியில் சுதந்திர விழாவையொட்டி ஒத்திகை நிகழ்ச்சி

தருமபுரியில் நாளை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையேற்று தேசிய கொடி ஏற்றவுள்ளார். பின்னர் பல்வேறு துறைகளில் அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் மக்களுக்கு பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்நிலையில் தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News February 24, 2026
தருமபுரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3) ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4) குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5) முதியோருக்கான அவசர உதவி -1253, 6) தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7) பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. *மற்றவர்களுக்கும் உதவியாக அமைய இதனை ஷேர் பண்ணுங்க
News February 24, 2026
தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வந்த பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ண மூர்த்தி(64), அவருடைய மனைவி பழனியம்மாள் ஆகியோர் தங்களது நிலத் தகராறு முறித்து பலமுறை அளவீடு செய்ய கோரிக்கை வைத்தும் காலதாமதம் ஆனதால், தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றனர். உடனே பாதுகப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
News February 24, 2026
தருமபுரியில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

தருமபுரி மாவட்டம் ராணி மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீநிதி (23). தர்மபுரி அரசு கல்லூரியில் எம்.ஏ. படித்து வந்தார். இவர் போட்டி தேர்வுக்கு படித்து வந்த தனது சகோதரியுடன் தர்மபுரியில் வாடகை வீட்டில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் ஸ்ரீநிதி தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்


