News September 16, 2025

தருமபுரியில் ஊக்கத்தொகையுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி

image

தருமபுரியில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு செப்.18 முதல் கடகத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 7 நாட்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் பங்கேற்போருக்கு சான்றிதழ், இலவச உணவுடன், ரூ.5,600 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 16, 2025

அன்புக் கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி?

image

தகுதி உடைய குழந்தைகள் பின்வரும் ஆவணங்களை கொண்டு அன்பு கரங்கள் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
1. குடும்ப அட்டையின் நகல்
2. குழந்தையின் ஆதார் அட்டையின் நகல்
3. குழந்தையின் வயது சான்று நகல் (பிறப்புச்சான்றிதழ்/கல்வி மாற்றுச் சான்றிதழ்/ மதிப்பெண் சான்றிதழ்)
4. குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல்
மேலும் விவரங்களுக்கு இந்த <<17726947>>லிங்கை <<>>பார்க்கவும் தேவை உடையவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்!

News September 16, 2025

தர்மபுரி: ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000

image

பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” என்னும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். <<17726934>>தொடர்ச்சி <<>> SHARE IT

News September 16, 2025

ஒகேனக்கலில் முழுவதுமாக தடை நீக்கம்

image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 9,500 கன அடியாக குறைந்ததால், சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால், குளிக்கவும், பரிசல் சவாரிக்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!