News August 20, 2025

தருமபுரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தருமபுரியில் நாளை (ஆகஸ்ட் 21) நடைபெற உள்ளது. தருமபுரியில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபம், கடத்தூரில் உள்ள மீனாட்சி மஹால், பென்னாகரத்தில் உள்ள பிக்கிலி 4 சாலை திறந்தவெளி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தடங்கம், பாலக்கோடு விபிஆர்சி கட்டிடம் கமலாம் பட்டி மற்றும் அரூரில் உள்ள அண்ணமார் திருமண மண்டபம் ஆகிய ஆறு இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. ஷேர்!

Similar News

News August 20, 2025

தருமபுரியில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள்

image

வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான முன்னேற்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சதீஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர். விழாவை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

News August 20, 2025

தர்மபுரி: வக்கீல் இல்லாமல் கேஸ் போடலாம்

image

தர்மபுரி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 04342-233781, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள். விபரங்களுக்கு <<17461682>>CLICK HERE<<>>

News August 20, 2025

இலவச சட்ட ஆலோசனை மையத்தின் சேவைகள்

image

சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை,குழந்தைகளுக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவைகளுக்கு ஆலோசனை பெறலாம். சில வழக்குகளுக்கு (சிவில் / கிரிமினல் / குடும்பம் சார்ந்த) இலவசமாக வழக்கறிஞர் பெறலாம் .நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு இரு தரப்பினரும் சமரசம் செய்ய தயாராக இருந்தால், லோக் அடாலட் மூலம் தீர்வு காணலாம். வக்கீல் பீஸ் இல்லாமலே வாதாட முடியும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!