News December 13, 2025
தருமபுரியில் ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி!

தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தர்மபுரி வனக்கோட்டத்தில் நடப்பு ஆண்டில் ஈர நிலங்களில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு பணி வரும் 27,28 தேதிகளில் நடக்க உள்ளது. பறவைகள் பற்றி நன்கு அறிந்தவர்களும் பறவைகளை அடையாளம் காணத் தெரிந்தவர்கள், இந்த கணக்கெடுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் வரும் 26 ஆம் தேதி மாலைக்குள் விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்த்துள்ளார்.
Similar News
News December 14, 2025
தருமபுரி: Certificate இல்லையா? கவலை வேண்டாம்!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம்.
News December 14, 2025
தருமபுரி: பிறந்தநாள் அன்று உயிரிழந்த சோகம்!

தருமபுரி, சந்தப்பேட்டை சேர்ந்த வினித் ஓசூர் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (டிச.13) அதிகாலை நண்பர்களின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு, காவேரிப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 14, 2025
தருமபுரி: பொருட்களை வாங்கும் முன் இத தெரிஞ்சிக்கோங்க!

கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல், வாங்கியபோது உள்ள நிலையில் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம். ஷேர்!


