News September 14, 2024
தருமபுரியில் இலவச தேய்ப்பு பெட்டி

தருமபுரியில் BC, MBC வகுனப்பினர்களின் பொருளாதர மேம்பாட்டிற்காக இலவச LPG தேய்ப்பு பெட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெற சலவை தொழிலை செய்யும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். LPG தேய்ப்பு பெட்டி பெறம் விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் BC, MBC (ம) சீர்மரபினர் அலுவலகத்தில் வழங்கலாம் என மாவட்ட ஆட்சி தலைவர் கூறியுள்ளார்.
Similar News
News November 7, 2025
தருமபுரி: சொந்த ஊரிலே அரசு வேலை!

சமூகநலத்துறையின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) – என்ற திட்டத்திற்கு பல்நோக்கு உதவியாளர்(24×7) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவத்தினை dharmapuri.nic.in தளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.17. ஷேர் பண்ணுங்க!
News November 7, 2025
தொப்பூர்: லாரி மோதியதில் உடல் நசுங்கி ஒருவர் பலி!

நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் கட்டமேடு அடுத்துள்ள கணவாய் பகுதியில் (நவ.5) காலை 12 மணி அளவில் கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு பணியில் இருப்பவரின் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
News November 7, 2025
தருமபுரியில் ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

தருமபுரி மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (மருத்துவமனை பட்டியல்) மேலும் தகவல்களுக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்திற்க்கான உதவி எண்ணை (1800 425 3993) தொடர்பு கொள்ளுங்கள். (SHARE பண்ணுங்க)


