News April 19, 2025
தருமபுரியில் இன்று மின்தடை அறிவிப்பு

தருமபுரியில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் காரணமாக தர்மபுரி நகரில் மதிக்கோன்பாளையம், காமாட்சியம்மன் தெரு, சந்தைப்பேட்டை, உழவர் சந்தை, டேக்கீஸ்பேட்டை, டவுன் போலீஸ் நிலையம், புரோக்கர் ஆபீஸ், வட்டார வளர்ச்சி காலனி, சில்வர் ஸ்பிரிங்ஸ் நகர், 4 ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் வினியோகம் இருக்காது. ஷேர் பண்ணுங்க
Similar News
News September 21, 2025
தர்மபுரி: புரட்டாசி அமாவாசையில் இதை செய்யுங்க!

மஹாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை திதியாகும். இந்த நாளில் முன்னோர்களுக்கு (பித்ருக்கள்) தர்ப்பணம், திதி மற்றும் சிரார்த்தம் செய்து அவர்களின் ஆசி பெறுவது வழக்கம். தர்மபுரியில் தென்பெண்ணை ஆற்று கரைகள், ஒகேனக்கல் காவிரி ஆறு, ஏரி, குளம் போன்ற இடங்களில் திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்நாளில் சமைத்த உணவை முதலில் காக்கைக்கு வைத்த பின்னரே மற்றவர்கள் உண்பது வழக்கம். ஷேர் பண்ணுங்க!
News September 21, 2025
தருமபுரி: கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?

தருமபுரி மக்களே மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம். <
News September 21, 2025
தமிழை வாழ வைத்த தர்மபுரி தமிழர்!

அதியமான் நெடுமான் அஞ்சி, சங்க கால தமிழகத்தை ஆண்ட குறுநில மன்னர்களில் மிகவும் புகழ் பெற்றவர். கடையேழு வள்ளல்களில் இவரும் ஒருவர். இன்றைய தர்மபுரி இவருடைய தலைநகராக இருந்தது. உண்டால் நீண்ட நாள் வாழவைக்க கூடிய நெல்லிக்கனி தனக்கு கிடைத்தும் அதனை தான் உண்ணாமல் ஔவைக்குக் கொடுத்தவர். “நான் இறந்தால் ஒருவன் இறப்பான். ஆனால், நீ நீண்ட காலம் வாழ்ந்தால் தமிழ் மொழி வாழும்” என்று ஔவையிடம் கூறியவர். SHARE IT!