News May 7, 2024
தருமபுரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தருமபுரி மாவட்டத்தில் இன்று(மே 7) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் பாரபட்சமின்றி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து மக்களை சிறிது இளைப்பாற வைக்கிறது. அதன்படி இன்று தருமபுரி உட்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 27, 2025
தர்மபுரி: அரசு துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை சார்பில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு நிபுணர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் போன்ற பதவிகளுக்கு, விருப்பமுள்ளவர்கள் செப்.25-க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். ரூ.40,000 – ரூ.1,50,000 வரை சம்பளம் வழங்கப்படும். கல்வித் தகுதி மற்றும் சம்பளம் உள்ளிட்ட விவரங்களுக்கு <
News August 27, 2025
தர்மபுரி மக்களே ட்ரோன் ஓட்ட ஆசையா?

வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் செப்.9 முதல் 11 வரை ட்ரோன் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. ட்ரோன்களை இயக்குவது, விதிமுறைகள், அரசு தரும் மானியம், ட்ரோன்களை வைத்து தொழில் தொடங்குவது தொடர்பான ஆலோசனை வழங்கப்படும். விரும்புவோர் 9543773337 / 9360221280 எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
News August 27, 2025
தர்மபுரி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) 04342-233299 தர்மபுரி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். *உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க*