News August 14, 2024
தருமபுரியில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு

தருமபுரி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணிவரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. அண்மையில் பெய்த மழையால், குடியிருப்பு பகுதிகளில் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இன்று இரவு கனமழை பெய்யும் என்பதால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது.
Similar News
News November 7, 2025
சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டம்

தருமபுரி மாவட்டத்தில், 2025-2026 கல்வியாண்டிற்கு வெளிநாடு சென்று படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டம் வெளியாகி உள்ளது. இந்த விவரங்களை www.tabcedco.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து மத்திய கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். என்று ஆட்சியர் சதிஷ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!
News November 7, 2025
தருமபுரி: வீடு புகுந்து தாக்குதல்!

தருமபுரி, பெரியாம்பட்டியில் முன் விரோதம் காரணமாக, மணிபாரதி என்பவரது இல்ல நிச்சயதார்த்த விழாவில், 2 பெண்கள் உள்பட 3 பேரை ஒரு கும்பல் தாக்கியது. இது தொடர்பாக மணிபாரதி அளித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார், அடிலம் பகுதி ஆனந்தன், மாதேஷ், மணிகண்டன், சிவக்குமார், காசன், ரஞ்சித், வேடியப்பன் ஆகிய 7 பேரை கைது செய்து காரிமங்கலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
News November 7, 2025
அலுவலக ஈப்பு பொது ஏலம் அறிவிப்பு

தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலக ஈப்பு (வாகன எண். TN09BG 2345) Bolero LX என்ற வாகனம் கழிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.75,000/- என்ற விலைக்கு விற்பனை செய்திட தொழில்நுட்ப வல்லுநர் குழுவினரால் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாகனத்தை வருகின்ற 07.11.2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.00 மணியளவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மறு ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.


