News March 20, 2025

தருமபுரிக்கு விரைவில் சிப்காட் – அமைச்சர்

image

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய பென்னாகரம் எம்.எல்.ஏ ஜி.கே.மணி, “தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் அமைக்க அரசு முன்வர வேண்டும்” என்றார். அவருக்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “தருமபுரியில் சிப்காட் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாகவும், விரைவில் நடைமுறைக்கு வரும்” என்றார். இதன்மூலம் தருமபுரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும்

Similar News

News April 19, 2025

தர்மபுரியின் சுற்றுலா தளங்கள்

image

தர்மபுரி மாவட்ட சுற்றுலா தளங்கள்
1.தீர்த்தமலை
2.ஓகேனக்கல்
3.நாகமரை
4.வத்தல்மலை
5.தும்கல் அருவி
6.தொல்லக்காது
7.பஞ்சப்பள்ளி அணை
தருமபுரி மாவட்டத்தில் சுத்தி பாக்க என்ன இருக்கு என்பவர்களுக்கு ஷேர் பண்ணி இதெல்லாம் இங்க இருக்குனு சொல்லுங்க

News April 19, 2025

போக்குவரத்துறையில் வேலை.. கடைசி வாய்ப்பு

image

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில்<<>> வரும் திங்கள்(ஏப்.21) ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உங்க நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News April 19, 2025

தருமபுரியில் இன்று மின்தடை அறிவிப்பு

image

தருமபுரியில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் காரணமாக தர்மபுரி நகரில் மதிக்கோன்பாளையம், காமாட்சியம்மன் தெரு, சந்தைப்பேட்டை, உழவர் சந்தை, டேக்கீஸ்பேட்டை, டவுன் போலீஸ் நிலையம், புரோக்கர் ஆபீஸ், வட்டார வளர்ச்சி காலனி, சில்வர் ஸ்பிரிங்ஸ் நகர், 4 ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் வினியோகம் இருக்காது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!