News October 14, 2025
தருமபுரிக்கு வந்த திரைப்பட இயக்குநர்

அரூரில் இன்று தண்டகாரண்யம் திரைப்படத்தின் திறனாய்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் அரூர் அம்பேத்கர் அறிவக அறக்கட்டளையில் யாசட் இயக்குநர் அதியன்ஆதிரை, கலை சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் அப்படத்தின் இயக்குநர் த.ராமலிங்கம், ஒளிப்பதிவாளர் பிரதீப்காளிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் கோட்டீஸ்வரன் நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினார்.
Similar News
News October 13, 2025
மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் குறைதீர்க்கும் கூட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், இன்று (13.10.2025) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். பொதுமக்களின் பிரச்சனைகள் குறித்து உரிய துறைகளின் அதிகாரிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
News October 13, 2025
தருமபுரி: பெற்றோர் திட்டியதால் மாணவி விபரீத முடிவு

அரூர் வர்ணதீர்த்தம், கேகே நகரை சேர்ந்த யுவராஜ். இவரது மகள் ரித்திகா (21). இவர் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், ரித்திகா செல்போனை அதிகளவில் பயன்படுத்தி வந்ததால் படிப்பில் கவனம் சிதைந்து விடும் எனக்கூறி பெற்றோர் ரித்திகாவை கண்டித்துள்ளனர். இதனால், மனம் உடைந்த அவர் நேற்று விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 13, 2025
தருமபுரியில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி வரும் அக்.16ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 8th,12th, டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 04342-288890 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். *நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*