News October 25, 2024
தரமற்ற விதைகளை விதைக்க கூடாது: ஆய்வு இயக்குநர்

விழுப்புரம் கோலியனூர் பகுதியில் உள்ள விதை விற்பனை நிலையங்களில், விதை ஆய்வு துணை இயக்குனர் சரவணன் நேற்று ஆய்வு செய்தார். அதன்பின் பேசிய அவர், “விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடப்பு பருவத்துக்கேற்ற தரமான உளுந்து விதைகளைத் தேர்ந்தெடுத்து, விதைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் உரிய ஆவணமின்றி விற்கப்படும் உளுந்து விதைகளை விதைப்புக்கு பயன்படுத்தக் கூடாது” எனத் தெரிவித்தார்.
Similar News
News August 18, 2025
விழுப்புரம்: அரசுப் பேருந்து மோதி ஐடி ஊழியர் பலி

சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த ஜெகதீஷ் (22), விடுமுறைக்காக பைக்கில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். மரக்காணம் அருகே கூனிமேடு பஸ் நிறுத்தம் அருகே எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் படுகாயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன
News August 18, 2025
விழுப்புரம்: MBA முடித்தவர்களுக்கு ரூ.93,000 சம்பளத்தில் வேலை

மத்திய பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்கில் காலியாக உள்ள 250 மேனேஜர் பணியிடங்கள் நிரப்பபடவுள்ளன. இதற்கு MBA முடித்த, 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 18, 2025
விழுப்புரம்: IT வேலை ரெடி.. நீங்க ரெடியா.?

ஐடி நிறுவனத்தில் பணியாற்றி பிரேக் எடுத்துள்ள பெண்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஜோஹோ சார்பில் மறுபடி எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தேர்வாகும் நபர்களுக்கு 3 மாத பயிற்சியுடன் பணி வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆகஸ்ட் 22ம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 23ம் தேதி நுழைவு தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க <