News September 4, 2024

தரமற்ற உணவு விற்பனையா?உடனே இதை செய்யுங்க!

image

மதுரை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் வெளியிட்ட அறிக்கை: மதுரை மாவட்டத்தில் குளிர்பான தரமில்லாத உணவு மற்றும் குளிர்பானங்களை பயன்படுத்துவதை நுகர்வோர் தவிர்க்க வேண்டும். பேக்கிங் உணவுப்பொருள், குளிர்பானங்கள், ரோட்டு கடை, உணவகம், ஓட்டலில் சாப்பிடும் உணவின் தரம் மீது சந்தேகம் ஏற்பட்டால் உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். வாட்ஸ்ஆப்பில் (94440 42322) புகார் தெரிவிக்கலாம் என்றார்.

Similar News

News August 26, 2025

மதுரை: மகளிர் உரிமைத் தொகை புகாரளிக்கலாம்

image

மதுரை மக்களே, வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் தகுதி வாய்ந்த மகளிர் தேர்வு செய்யப்பட்டு அரசு மூலம மாதம் தோறும் ரூ.1000 கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் தகுதி அல்லாதவர்கள் மகளிர் உரிமை தொகை பெற்றுக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரிந்தால் <>இங்கே க்ளிக் செய்து<<>> அரசுக்கு புகார் தெரிவிக்க முடியும். அதில் உரிமை தொகை பெறும் தகுதியற்ற நபரின் விவரங்களை பதிவிட்டு புகாரளிக்கலாம்.தகுதியான நபர்கள் பயன்பெற SHARE செய்ங்க.

News August 26, 2025

மதுரை: கேஸ் சிலிண்டர் இருக்கா..இது கட்டாயம்

image

மதுரை மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். மறக்காம SHARE பண்ணுங்க.ஆபத்தில் இது கண்டிப்பாக உதவும்.

News August 26, 2025

ரூ.2.75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி

image

மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நரம்பியல் பாதிப்பு, ஆட்டிசம் போன்றவற்றால் நடக்க இயலாத மாணவர்கள் 61 பேருக்கு காலிப்பர்கள், விபத்தில் கால் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு செயற்கை கால்கள் என மொத்தம் ரூ.2.75 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

error: Content is protected !!