News August 26, 2024
தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த மக்கள்

தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதி. இங்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், நேற்று மாலை கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து விளையாடி மகிழ்ந்தனர்.
Similar News
News October 22, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் 231.60 மிமீ மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று காலை தொடங்கி இன்று அதிகாலை வரை விட்டுவிட்டு கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை 6.30 மணி வரையிலான நிலவரப்படி, செம்பனார்கோவிலில் (24 மணி நேரத்தில்) அதிகபட்சமாக 48.80 மழையும், மயிலாடுதுறையில் 39.60 மி.மீ, கொள்ளிடத்தில் 44.60 மி.மீ, சீர்காழியில் 42.60 மி.மீ என மாவட்டம் முழுவதும் 231.60 மழை பெய்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News October 22, 2025
மயிலாடுதுறை: இந்திய அஞ்சல் துறையில் வேலை

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், IPPB வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க
News October 22, 2025
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. ‘1077’, ‘04364-222 588’, ‘7092255255’ ஆகிய எண்கள் மூலமாக மழை, வெள்ள மற்றும் அவசர உதவிக்கு கட்டுப்பாடு அறையை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE