News September 15, 2025

தயார் நிலையில் மாநகராட்சி

image

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தாழ்வான இடங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைக்காக மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் ரிப்பன் கட்டட வளாகத்திற்கு வரவழைக்கப்பட்டு, தயார்நிலையில் வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Similar News

News September 15, 2025

கே.கே.நகரில் விழுந்த ராட்சத மரம்

image

சென்னை, கே.கே.நகர் 80 அடி சாலையில் பெரிய மரம் விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 20 நாட்களுக்கு முன்பாக மழை நீர் வடிகால் பணியின் போது பள்ளம் தோண்டி மூடப்பட்டுள்ளது. அப்போது, பள்ளம் தோண்டும் போது மரத்தின் வேர்களை வெட்டியதால் பிடிமானம் இல்லாமல் சற்றுமுன் மரம் சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News September 15, 2025

சென்னை: இலவசமாக காசிக்கு போக சூப்பர் வாய்ப்பு

image

தமிழக இந்து சமய அறநிலையத்துறை 600 பக்தர்களை ராமேஸ்வரம் – காசிக்கு ரயில் மூலமாக இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல உள்ளது. 60 முதல் 70 வயதுடைய, ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்குள் வருமானம் உள்ள பக்தர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை சென்னை மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலோ அல்லது இந்த <>இணையதளத்திலோ <<>>பெற்று அக்.22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். (SHARE)

News September 15, 2025

சென்னை: BE போதும்..ரூ.80,000 வரை சம்பளம்

image

சென்னை பட்டதாரிகளே, மத்திய அரசு நிறுவனமான ‘இஞ்ஞினியர்ஸ் இந்தியா’-வில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தேர்வெழுத அவசியம் இல்லை. மாதம் ரூ.72,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே<> கிளிக்<<>> பண்ணுங்க! இதை உடனே உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!