News January 28, 2026
தம்பி விஜய்யுடன் கூட்டணி சேரும் அண்ணன்

தமிழக அரசியல் களம் ஏற்கெனவே சூடாக உள்ள நிலையில் அதனை கொந்தளிக்க வைக்கும் வகையில் யாரும் எதிர்பாரா புதிய கூட்டணியை அமைக்கிறாராம் விஜய். ராமதாஸ் தரப்பு தவெகவுடன் ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மறுபக்கம் 100 தொகுதி, DCM, 6 அமைச்சர் பதவி தருகிறோம். நாம் இணைந்தால் ஆட்சி நமதே என விஜய் சீமானிடம் பேசியுள்ளார். இதற்கு சீமானும் நேரில் பேசலாமே என சிக்னல் கொடுத்துள்ளாராம். இந்த கூட்டணி அமையுமா?
Similar News
News February 6, 2026
கருப்பு உளுந்தில் இவ்வளவு நன்மைகளா?

இந்திய உணவு வகைகளில் முக்கிய இடம்பிடிக்கும் தானியத்தில் உளுந்தம் பருப்பும் ஒன்று. வெள்ளை உளுந்தை காட்டிலும் கருப்பு உளுந்து அதிக நார்ச்சத்து கொண்டது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன்படி இது செரிமானத்தை மேம்படுத்தி, உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது. எலும்புகளை வலுப்படுத்தவும், ரத்த சோகையைத் தடுக்கவும் உதவுகிறது. இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
News February 6, 2026
தங்கம் விலை குறைய காரணம் என்ன?

சமீபத்தில் ஒரு சவரன் தங்கம் ₹1,25,000-ஐ கடந்து நிலையில், நேற்றைய நிலவரப்படி ₹4,650 குறைந்து ₹1,14,560-க்கு விற்பனையானது. US டாலரின் மதிப்பு உயர்வு, equity markets-ன் சரிவே விலை குறைந்ததற்கான காரணமாகும். அதோடு பணவீக்க அபாயத்தால் விகித குறைப்பை ஆதரிக்க போவதில்லை என ஃபெடரல் ரிசர்வ் கவர்னர் லிசா குக் கூறியிருக்கிறார். எனினும், இந்தாண்டு 1 அவுன்ஸ்(28g) தங்கம் $6000-க்கு விற்பனையாக வாய்ப்புள்ளதாம்.
News February 6, 2026
பிப்ரவரி 6: வரலாற்றில் இன்று

*1931 – சுதந்திர போராட்ட வீரர் மோதிலால் நேரு நினைவு நாள்
*1945 – பாடகர் பாப் மார்லி பிறந்தநாள்
*1956 – கவிஞர் பிறைசூடன் பிறந்தநாள்
*1959 – கண்டம் விட்டுக் கண்டம் பாயும் டைட்டன் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாக சோதனை
*1983 – வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் பிறந்தநாள்
*2022 – பாடகி லதா மங்கேஷ்கர் நினைவு நாள்


