News October 12, 2025
தமுக்கம் கண்காட்சி – அனுமதி இலவசம்!

‘மாமதுரை – இயற்கை மதுரை’ கண்காட்சி நேற்று தமுக்கத்தில் துவங்கியது. இதில் இயற்கை விவசாயிகளின் பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள், கீரை வகைகள், செக்கு எண்ணெய், சிறுதானிய இனிப்பு, கார வகைகள், சூப்கள், காய்கறி நாற்றுகள், விதைகள், மரக்கன்றுகள், அழகுச்செடிகள், மண்புழு & இயற்கை உயிர் உரங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது; அனுமதி இலவசம். *ஷேர் பண்ணுங்க
Similar News
News March 4, 2026
மதுரை: பெரியார் பேருந்து நிலையம் அருகே சடலம் மீட்பு

மதுரை டவுன் ரயில் நிலையம் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள நகர பேருந்து நிறுத்தம் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க விலாசம் தெரியாத வாலிபர் நேற்று இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் குறித்து விசாரணைசெய்து வருகின்றனர்.
News March 3, 2026
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (03.03.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 3, 2026
மதுரை : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

மதுரை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


