News December 27, 2025
தமிழ் வளர்ச்சி துறை பேரணியை துவங்கி வைத்த ஆட்சியர்

திருவாரூர் மாவட்டம் திருவாரூர் பழைய ரயில் நிலையத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் குறித்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூர் பழைய ரயில் நிலையத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பேரணியை துவங்கி வைத்தார்.
Similar News
News December 29, 2025
திருவாரூர்: நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மாற்றத்திறனாளிகளுக்கான செயற்கைக்கால்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நடைபெற்ற குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
News December 29, 2025
திருவாரூர்: கலெக்டர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பெயரில் போலியாக முகநூல் கணக்கு ஒன்று துவக்கப்பட்டுள்ளது. இதற்கும் திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. போலி முகநூல் கணக்கை முடக்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் “கலெக்டர் திருவாரூர்” என்ற பெயரில் உள்ளது என திருவாரூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 29, 2025
திருவாரூர்: கவலை நீங்க இந்த கோயில் செல்லுங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற கூத்தனூர் மகா சரசுவதி திருக்கோயில், இந்த கோயிலுக்குச் சென்றால் தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல ஆன்மிக, மன நல நன்மைகளை பெறலாம் என்று ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.


