News August 3, 2024
தமிழ் யூடியூபர் இர்பானுக்கு அபராதம்

ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதாக தமிழ் யூடியூபர் இர்பானுக்கு சென்னை போக்குவரத்து போலீசார் ரூ.1,000 அபராதம் விதித்துள்ளனர். மேலும், சரியான நம்பர் பிளேட் இல்லாததற்கும் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். சமீபத்தில், நடிகர் பிரசாந்தும் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதற்காக, ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. சாலை விதிகளை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டுமென போக்குவரத்து போலீசார் கவனித்து வருகின்றனர்.
Similar News
News November 8, 2025
6.42 லட்சம் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான படிவம் வழங்கி வருகின்றனர். நேற்று வரை 6.42 லட்சம் பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணி முடிவடையும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News November 8, 2025
சென்னை: விஜய்க்கு முதல்வர் மறைமுக பதிலடி!

திமுக – தவெக இடையே தான் வரும் தேர்தலில் போட்டி என தவெக தலைவர் விஜய் கூறி வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற திமுகவின் 75வது ஆண்டு விழாவில், ‘திமுகவின் வரலாறு தெரியாத சிலர் மிரட்டிப் பார்க்கின்றனர். அதிலும், சில அறிவிலிகள் திமுக போல் வெற்றி பெற்றுவிடுவோம் என பகல் கனவு காண்கின்றனர். திமுக போல் வெற்றி பெற அறிவும், உழைப்பும் தேவை’ என பேசினார்.
News November 8, 2025
சென்னை: கேஸ் வாங்குறீங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க

சென்னை மக்களே! உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த SHARE பண்ணுங்க.


