News April 13, 2025
தமிழ் புத்தாண்டு- வடபழனி முருகன் கோயில் போங்க

சென்னை வடபழனி முருகன் கோயிலில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News April 18, 2025
வேலையில்லா இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் மாதாந்திர உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். 10, 12ஆம் வகுப்பு, தொழிற்கல்வி, பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து இருக்க வேண்டும். அதேபோல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு குறைவாக இருக்க வேண்டும்.
News April 18, 2025
சென்னை ஐஐடியில் வேலைவாய்ப்பு

சென்னை ஐ.ஐ.டி.,யில் பதிவாளர், கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மே 19ஆம் தேதிக்குள் இந்த <
News April 18, 2025
சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புனித வெள்ளியான இன்று (ஏப்ரல் 18) பெருநகர் மற்றும் புறநகரில் ஒருசில பகுதிகளில் சாரல் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விடுமுறையை முன்னிட்டு வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது வெயில் அடித்தாலும், இன்றைக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஷேர் செய்யுங்கள்.