News June 14, 2024

தமிழ் பாடத்தில் 100/100 பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

image

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் ஐம்பெரும் விழா நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற 43 மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.

Similar News

News March 2, 2026

சென்னையில் கொடூரத்தின் உச்சம்

image

அயனாவரத்தைச் சேர்ந்த 7வயது சிறுமி கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது விஜய்(35) என்பவர் வலுக்கட்டாயமாக அந்த சிறுமியை தன் வீட்டிற்குள் அடைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டு துன்புறுத்தியுள்ளார். சிறுமி அலறலை கேட்டு வந்த அவரது தாய், மகளை மீட்டு, சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அயனாவரம் மகளிர் போலீசார் விசாரித்து, விஜயை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News March 2, 2026

சென்னை: மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பலி!

image

கொத்தவால்சாவடியை சேர்ந்தவர் முத்துகுமார் (57). இவரது வீட்டில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மோமின், சூரஜ், ரியாஸ்கான் உள்ளிட்டோர் பணி செய்து வந்தனர். நேற்று, கூரை அமைப்பதற்காக, இரும்பு சீட்டை எடுத்து வந்த போது மின்மாற்றியில் உரசியதில், மோமின் உட்பட மூவரும் பலத்த காயமடைந்த நிலையில், மோமின் உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 1, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் நேற்று (மார்ச். 1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!