News December 31, 2025

தமிழ் பாடகி காலமானார்.. உருக்கமாக இரங்கல்

image

பருத்திவீரன் பட பாடகி லட்சுமி அம்மாள் மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். பல நாட்டுப்புற பாடல்கள் பாடிய அவர், திரைத்துறையிலும் புகழ்பெற்றவராக இருந்தார். நமது சென்னை சங்கமம் கலைவிழாவிலும் பங்கேற்று பாடியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஆழ்த்த இரங்கல் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். அதேபோல், திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Similar News

News January 22, 2026

சற்றுமுன்: விலை கணிசமாக குறைந்தது

image

நாமக்கல்லில் கறிக்கோழியின் விலை கடந்த சில நாள்களுக்கு முன் வரலாறு காணாத உச்சமாக ஒரு கிலோ ₹152 ஆக உயர்ந்தது. இதனால், சில்லறை கடைகளில் சிக்கன் கிலோ ₹300 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, கறிக்கோழி விலை கிலோவுக்கு ₹7 குறைந்து ₹145 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் முட்டை கொள்முதல் விலை மாற்றமின்றி ₹5.30 ஆக நீடிக்கிறது. உங்க பகுதியில் சிக்கன் விலை எவ்வளவு?

News January 22, 2026

கவர்னர் மாளிகை லோக் பவன் அல்ல; லோக்கல் பவன்: DMK MLA

image

சட்டப்பேரவையில் கவர்னர் ஆர்.என்.ரவி அவமதிக்கப்பட்டதாக <<18904228>> கவர்னர் மாளிகை<<>> அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் கவர்னர் உரையின் மீதான விவாதத்தின்போது, கவர்னர் குறித்து கடுமையான விமர்சனங்களை திமுக MLA பரந்தாமன் முன்வைத்தார். அப்போது பேசிய அவர் கவர்னர் மாளிகையை ‘அது லோக் பவன் அல்ல, லோக்கல் பவன்’ என விமர்சித்தார்.

News January 22, 2026

SBI வங்கி அக்கவுண்ட் இருந்தால் ₹2 லட்சமா?

image

எஸ்பிஐ வங்கியில் வாடிக்கையாளர்களுக்கு ₹2 லட்சம் பணம் தரப்படுவதாக ஒரு தகவல் ஷேர் செய்யப்படுகிறது. உண்மையில் இது சில கஸ்டமர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் லோன் ஆஃபராம். இதற்கு SBI வாடிக்கையாளர் என்பதை தவிர, Salary account-ம், மாத வருமானம் குறைந்தது ₹15,000-ம் இருக்க வேண்டும். CIBIL ஸ்கோர் 650 அல்லது 700க்கு மேல் இருந்தால், இந்த லோனுக்கு அப்ளை செய்யலாம். மேலதிக தகவலுக்கு வங்கியை அணுகவும்.

error: Content is protected !!