News December 13, 2025
தமிழ் நடிகை தற்கொலைக்கு இதுதான் காரணம்

தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்த திட்டமிட்ட சீரியல் நடிகை <<18544425>>ராஜேஸ்வரி<<>>, வீட்டின் குத்தகை தொகை ₹13 லட்சத்தை பயன்படுத்த நினைத்திருக்கிறார். இதற்கு கணவர் சதீஷ் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற ராஜேஸ்வரி, அளவுக்கு அதிகமான BP மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
1 பெண் 10 குழந்தைகளை பெற்றெடுத்தார் ❤️❤️

இன்றைய நவீன காலத்தில் ஒரு குழந்தையே போதும் சாமி! என பெற்றோர்கள் நினைக்கும் நிலையில், மத்திய பிரதேசத்தில் 40 வயதான பழங்குடியின பெண் ஒருவர், திருமணமான 18 ஆண்டுகளில் 10-வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதுகுறித்து அப்பெண்ணின் கணவர், இது கடவுளின் விருப்பம்!, 5 மகன்கள், 5 மகள்கள் சுக பிரசவத்தில் பிறந்ததாக பெருமிதத்துடன் கூறும் அவர், தனது மனைவிக்கு கருத்தடை செய்ய பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
News December 15, 2025
‘வா வாத்தியார்’ ரிலீஸ் எப்போது?

₹21 கோடி கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் <<18539007>>‘வா வாத்தியார்’<<>> படத்தை ரிலீஸ் செய்ய சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இந்நிலையில், MGR நினைவு நாளான வரும் 24-ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து SC-ல் மேல்முறையீடு செய்யவும், அதேவேளையில் சம்பந்தப்பட்ட தரப்புடன் பேச்சுவார்த்தையிலும் தயாரிப்பு நிறுவனம் இறங்கியுள்ளதாம்.
News December 15, 2025
100 நாள் வேலை திட்டத்தை சின்னாபின்னமாக்கும் அரசு: CM

புதிய ‘VB-G RAM G’ திட்டத்தை கைவிட வேண்டும் என CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மகாத்மா காந்தி <<18571984>>100 நாள் வேலை<<>> திட்டத்தை பாஜக அரசு சின்னாபின்னமாக்குகிறது. 100% மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே ஒதுக்குவார்கள் என்ற அவர், வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் TN-க்கு கிடைக்கும் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


