News November 14, 2025

தமிழ் நடிகர் மறைவு.. திரை பிரபலங்கள் அஞ்சலி

image

மறைந்த நடிகர் அபிநய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவேந்தல் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள கோல்டன் பாரடைஸ் திருமண மண்டபத்தில் நடந்த நினைவேந்தல் கூட்டத்தில் KPY பாலா உள்ளிட்ட திரைபிரபலங்கள் & அபிநய்-யின் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த அபிநய்யின் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய திரைபிரபலங்கள், அவருடனான நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர்.

Similar News

News April 11, 2026

இந்தியாவுக்கு கிடைத்த 4 தங்கமகள்கள்

image

மங்கோலியாவில் நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 5 தங்கப் பதக்கங்களை இந்தியா தன்வசப்படுத்தியுள்ளது. மீனாட்சி (48 kg), பிரீத்தி (54 kg), பிரியா (60 kg) & அருந்ததி (70 kg) ஆகிய 4 வீராங்கனைகள் தங்கப் பதக்கங்களை கைப்பற்றினர். 50 kg ஆடவர் பிரிவில் விஷ்வாந்த் சுரேஷ், ஜப்பானின் டைச்சி இவாயியை 5:0 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றுள்ளார். பதக்கப்பட்டியலில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது.

News April 11, 2026

கூட்டணியில் மரியாதை இல்லை: மாணிக்கம் தாகூர்

image

மாணிக்கம் தாகூர், மீண்டும் தன் பேச்சால் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். மதுரையில் காங்., நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், கூட்டணிக்கு நம்மை அழைக்கவில்லை; மரியாதையும் இல்லை, நிர்வாகிகள் அனைவரும் கனத்த இதயத்துடன் உள்ளனர் என்றார். இருப்பினும், ஏப்.23 வரை இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, வெற்றிக்காக பாடுபடுங்கள் என்றும் கட்சியினரை அறிவுறுத்தியுள்ளார்.

News April 11, 2026

நண்பருக்கு ஆதரவாக நிற்கும் சூர்யா

image

ரிலீஸுக்கு முன்பே ஜன நாயகன் படம் லீக்கானது நெஞ்சை உலுக்கும் அநீதி என சூர்யா கூறியுள்ளார். இதுதொடர்பான X பதிவில், ஒரு குழுவின் உழைப்பும், ஆர்வமும் சிதைக்கப்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தார். தயவுசெய்து இப்படத்தை இணையத்தில் பகிரவோ, விவாதிக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொண்ட சூர்யா, இது மன்னிக்க முடியாதது என கடிந்துகொண்டார். மேலும், தனது நண்பர்களுக்கு ஆதரவாக நிற்பதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!