News November 13, 2025

தமிழ் நடிகர் கைது விவகாரத்தில் புதிய திருப்பம்

image

மோசடி புகாரில் நெல்லையில் வைத்து பிக்பாஸ் பிரபலம் தினேஷ் <<18275184>>கைது<<>> செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், தன்னை கைது செய்யவில்லை என்றும், இது நன்கு திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட போலியான புகார் என்றும் தினேஷ் விளக்கமளித்துள்ளார். வள்ளியூரில் வேறு ஒரு பிரச்னையில் தான் வழக்கு ஒன்றை எதிர்கொண்டு வருவதாகவும், தனது தொழிலில் உள்ள ஒரு சிலரால் இந்த புகார் போலியாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News April 5, 2026

சிவகங்கை அருகே சோகம்; இறப்பிலும் பிரியாத தம்பதி.!

image

சிவகங்கை குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (78) – மனோன்மணி (70) தம்பதி. சுந்தரம் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இரவு சுந்தரம் மாரடைப்பால் உயிரிழந்தார். கணவர் இறந்த தூக்கம் தாங்காமல்இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்த மனோன்மணி, நேற்று மதியம் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

News April 5, 2026

முதல் வெற்றியை பதிவு செய்யுமா CSK?

image

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் IPL போட்டியில், இன்று CSK -RCB பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு சாம்பியனான RCB 2-வது வெற்றியை ருசிக்க கடுமையாக போட்டியிடும். அதேநேரம், 2 போட்டிகளிலும் மோசமான தோல்வியைச் சந்தித்த CSK, இப்போட்டியில் மீண்டெழ வேண்டும் என்ற கட்டாயத்தில் டஃப் ஃபைட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டி பற்றி உங்கள் கணிப்பு என்ன?

News April 5, 2026

அதிமுகவில் இணைந்த தவாக வேட்பாளர்.. வேல்முருகன் ஷாக்!

image

வேப்பனப்பள்ளி தொகுதி தவாக வேட்பாளரும், மாவட்ட பொறுப்பாளருமான தி.க.குமார், KP முனிசாமி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் 200-க்கும் மேற்பட்டோருடன் அதிமுகவில் இணைந்தார். திமுக கூட்டணியில் இருந்து பிரிந்த தவாக பெரிய கட்சிகளின் கூட்டணி இல்லாமல் தேர்தலில் களம் காண்கிறது. இந்நிலையில், கட்சியின் முக்கிய பொறுப்பாளரான தி.க.குமார் அதிமுகவுக்கு சென்றது வேல்முருகனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

error: Content is protected !!