News November 15, 2025
தமிழ் நடிகர் காலமானார்.. கண்ணீரில் திரையுலகம்

இயக்குநரும், நடிகருமான வி.சேகர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடல் போரூர் ராமச்சந்திரா ஹாஸ்பிடலில் இருந்து கோடம்பாக்கம் வரை ஊர்வலமாக தற்போது எடுத்த செல்லப்படுகிறது. வழிநெடுக இயக்குநர்கள், திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். மேலும், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்து வதற்காக கோடம்பாக்கம் இல்லத்தில் அவரது உடல் சற்றுநேரத்தில் வைக்கப்படவுள்ளது.
Similar News
News November 15, 2025
BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

ஆபரணத் தங்கம் விலை இன்றும் மளமளவென்று குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹1,520 குறைந்து ₹92,400-க்கும், கிராமுக்கு ₹190 குறைந்து ₹11,550-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாள்களிலும் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
News November 15, 2025
காங்கிரஸை கலைத்து விடுங்கள்: KTR

பிஹார் தேர்தல் முடிவை போன்று தான் தமிழகத்திலும் முடிவு இருக்க போகிறது என்று KT ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். காங்., கட்சியை கலைத்து விடுங்கள் என்று கூறிய அவர், நாட்டுக்கும் ஊருக்கும் காங்., ஆகாது என்றும் விமர்சித்தார். வீணாய்ப் போன காங்., கட்சியை திமுக தான் தூக்கிப் பிடிக்கிறது என்றும் காட்டமாக தெரிவித்தார். பிஹார் தேர்தலில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்., 6 இடங்களில் மட்டுமே வென்றது.
News November 15, 2025
100 நாள் வேலை திட்டத்தில் இனி 4 மணி நேரம் வேலை

₹2,000 உதவித்தொகையை ₹6,000 ஆக உயர்த்த கோரி தமிழகம் முழுவதும் கடந்த 11-ம் தேதி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் அவர்களை அழைத்து பேசினார். இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் சங்கம் கூறும்போது, உதவித்தொகை ₹1,000 உயர்த்தப்படும்; மேலும், 100 நாள் வேலை திட்டத்தில் இனி 4 மணி நேரம் வேலை செய்தால் போதும் என தலைமை செயலாளர் உறுதியளித்ததாக தெரிவித்தனர்.


