News November 9, 2025
தமிழ் நடிகர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

ஆசையாக அப்பாவை சந்திக்க சொந்த ஊருக்கு சென்ற சின்னத்திரை நடிகர் பேரரசு(21), கடலூர், ஆண்டிக்குப்பம் அருகே அரசு பஸ் மோதிய விபத்தில் உயிரிழந்தார். இவர், ‘உப்பு புளி காரம்’ வெப் சீரிஸ் மூலம் பிரபலமானதோடு, உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து வந்தார். வளர்ந்து வந்த இளம் நடிகரை இழந்துவிட்டோம் அவருடன் ‘உப்பு புளி காரம்’ தொடரில் நடித்த சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
Similar News
News November 9, 2025
அடிக்கடி Scent அடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்க?

Scent அடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால், தொடர்ந்து Scent பயன்படுத்துவது உடல் நலத்திற்கு கேடாக அமையலாம் என எச்சரிக்கப்படுகிறது. Scent-களில் Phthalate என்ற கெமிக்கல் சேர்க்கப்பட்டிருக்கும். அதை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, Hormone செயல்பாட்டில் சீர்கேடு, ஆண்களுக்கு இனப்பெருக்க பிரச்னைகளை உண்டாக்குமாம். Scent வாங்கும் போது Phthalate Free என்று இருக்கிறதா என்பதை கவனியுங்கள். SHARE IT.
News November 9, 2025
தங்கம் குறைந்த விலையில் கிடைக்கும்

இந்தியா, துபாயை விட பூட்டானில் தங்கம் விலை குறைவு. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டமிட்ட அந்நாட்டு அரசு, அங்கு தங்கத்திற்கு வரி விலக்கு அளித்துள்ளது. அத்துடன், பொதுவாகவே அங்கு இறக்குமதி வரி குறைவு என்பதால் தங்கத்தின் விலை சற்று குறைவாகவே இருக்கிறது. இன்றைய நிலவரப்படி, துபாயில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ₹1,12,700 என்றால், நமது அண்டை நாடான பூட்டானில் ₹84,464 தான்.
News November 9, 2025
Ph.D மாணவிகளுக்கு பெரிய தொகை வழங்கும் திட்டம்

Ph.D பட்டம் பெற படிக்கும் மாணவிகளுக்கு சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலே ஃபெல்லோஷிப் திட்டம் 5 ஆண்டுகளுக்கு மாதம் 35,000 வரை வழங்குகிறது. விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது 40-க்கும் குறைவாக இருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி முறை அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் மாணவிகள் இந்த உதவித்தொகையை பெற முடியாது. அப்ளை பண்ண இங்கே <


