News November 22, 2025

தமிழ் நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்

image

நடிப்பு பயிற்சியாளர் கோபாலி(92), <<18290175>>இயக்குநரும், நடிகருமான வி.சேகர்<<>>(73), <<18248121>>நடிகர் அபிநய்(48)<<>> என இம்மாதத்தில் அடுத்தடுத்து முக்கிய நபர்களை தமிழ் சினிமா இழந்துவிட்டது. இதில் கோபாலி, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நாசர் உள்ளிட்ட பலர் உச்சபட்ச நடிகர்களுக்கு பயிற்சி அளித்தவர். கடந்த 18-ம் தேதி மறைந்த நிலையில், அவரது இல்லத்திற்கு இன்றும் சினிமா பிரபலங்கள் பலர் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

Similar News

News November 22, 2025

தாக்குதலுக்கு 2 ஆண்டுகளாக தயாரான தீவிரவாதிகள்

image

<<18342042>>டெல்லி கார் குண்டுவெடிப்பில்<<>> முக்கிய குற்றவாளியான டாக்டர் முசாமில் ஷகீல், NIA விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்காக கடந்த 2 ஆண்டுகளாக தயாராகி வந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அம்மோனியம் நைட்ரேட் போன்ற குண்டு தயாரிக்கும் பொருள்கள் மற்றும் ரிமோட்களை வாங்கியதாகவும், இதற்காக ₹26 லட்சத்தை திரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

மனிதர்களை விட அதிக நாள்கள் வாழும் உயிரினங்கள்

image

சில விலங்குகளின் ஆயுள்காலம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஆழ்கடல் உயிரினங்கள் முதல் ஆமைகள் வரை, மனிதர்களை விட அதிக ஆயுளைக் கொண்டுள்ளன. அவை, என்னென்ன விலங்குகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 22, 2025

ஆசிரியர்களை அரசு கைவிடாது: CM ஸ்டாலின்

image

டெட் தேர்வு குறித்து CM ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை செய்தார். ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற SC-யின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு, ஆசிரியர்களின் அச்சம் ஆகியவை குறித்து அவர் எடுத்துரைத்தார். அதற்கு, ஆசிரியர் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசு எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களை கைவிடாது என்றும் CM உறுதியளித்தார்.

error: Content is protected !!