News October 8, 2024
தமிழ் தொண்டர்கள் உதவி தொகை பெற வாய்ப்பு

நெல்லை மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பு: முதுமை காலத்திலும் பொருள் வறுமை எதிர்கொள்வதற்காக தமிழ் தொண்டர்களுக்கு மாதம் ரூ. 3500, மருத்துவத்திற்கு 500 என 4000 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழ் பணி ஆற்றிய விவரங்கள், பரிந்துரை சான்றிதழ், ஆதார் குடும்ப அட்டை ஆகிய நகல்களுடன் 58 வயது நிறைவடைந்தவர்கள் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் இம்மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பத்தை பெறலாம்.
Similar News
News November 16, 2025
நெல்லை: போலீசாரை வெட்ட முயன்ற 2 பேர் கைது

நெல்லை, சுத்தமல்லி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சினேகாந்த் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே ஊரை சேர்ந்த கருத்தப்பாண்டி (25), மாரிமுத்து (28)-ஐ மறித்த போது, அவர்கள் தப்ப முயன்றுள்ளனர். இவர்களை பிடிக்க முயற்சித்தபோது, அவர்கள் அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அடுத்து போலீசார் நேற்று அவர்களை கைது செய்தனர்.
News November 16, 2025
நெல்லை மக்களே கவனமாக இருங்கள்! எச்சரிக்கை…

நாளை (நவ. 17) திங்கள்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்டத்திற்கு அதிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. இதனை அடுத்து மாவட்டத்தில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தாழ்வான பகுதிகள் நீர் நிலைகளில் அருகில் வசிக்கும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
News November 16, 2025
பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிப்பு

நெல்லை அரசு அருங்காட்சியகமும் தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளையும் இணைந்து குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி அரசு அருங்காட்சியகத்தில் வைத்து பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் 7548810067 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வருகின்ற 21ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டுமென இன்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


