News December 28, 2025
தமிழ் சினிமாவின் கேப்டனுக்கு நினைவு நாள் (PHOTOS)

நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்தின் 2-வது நினைவுதினம் இன்று. திரையில் ஆக்ஷன் நாயகனாக திகழ்ந்தாலும், வாழ்வில் மனிதநேயத்தின் உச்சமாக வாழ்ந்தார். மக்கள் அவரது நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இருந்தாலும், மறைந்தாலும் விஜயகாந்த் மக்களின் நெஞ்சங்களின் ‘கேப்டன்’ தான். அவரின் வாழ்க்கை வரலாற்றை Gallery-யாக கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக SWIPE செய்து பார்க்கவும்.
Similar News
News December 29, 2025
நாகை: தெரு நாய்களால் பறிபோன உயிர்!

திட்டச்சேரி பகுதி விவசாயிகள் நேற்று ஆடுகளை பள்ளி மைதானத்தில் மேய விட்டுள்ளனர். அப்போது வெயிலின் காரணமாக வீட்டுக்கு சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்க்கும் பொழுது அங்கு பல ஆடுகளின் தலை மற்றும் உடல்களில் பலத்த காயம் ஏற்பட்டு ஒரு ஆடு செத்து கிடந்தது. அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் தான் ஆடுகளை கடித்து குதறியது தெரிய வந்தது. எனவே அப்பகுதி தெருநாய்களை விரைந்து பிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
News December 29, 2025
பூஜை அறையில் இந்த 3 விஷயங்கள் இருக்கா..

வீட்டின் பூஜை அறையில் இருக்கும் இந்த பொருள்கள் எதிர்மறை ஆற்றலை கொடுக்கின்றன ✱பூஜை அறையில் முன்னோர்களின் படங்களை வைக்கக்கூடாது. மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் ✱வாடிய, காய்ந்த பூக்களை அப்படியே பூஜை அறையில் மறந்தும் போட்டு வைக்காதீர்கள். அது வாஸ்துப்படி மிகவும் அசுபமானது ✱சங்குகளை கண்டிப்பாக வைத்திருக்ககூடாது. அது வாஸ்து தோஷத்தை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. SHARE IT.
News December 29, 2025
தங்கம் விலை மளமளவென குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் விலை சர்வதேச சந்தையில் திடீரென இறங்குமுகம் கண்டு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) $42(இந்திய மதிப்பில் ₹3,772) குறைந்து $4,441-க்கு விற்பனையாகிறது. இதனால், இந்திய சந்தையில் இன்று தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


