News February 4, 2026
தமிழ் இசையமைப்பாளர் காலமானார்.. குவியும் அஞ்சலி

‘பூவுக்குள் பூகம்பம்’ படத்தின் மூலம் அறிமுகமான இசையமைப்பாளர் எஸ்.பி.வெங்கடேஷ் (எ) சங்கீத ராஜன் (70) காலமானார். ‘முனி’, ’சினேகிதி’ உள்ளிட்ட பல படங்களுக்கும் இசையமைத்த இவர், கடந்த சில நாள்களாக நுரையீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இன்று போரூர் மயானத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
Similar News
News February 15, 2026
மகளிர் உரிமைத்தொகை ₹5,000.. புதிதாக சேர்ந்தவர்களுக்கு..

மகளிர் உரிமைத்தொகை ₹5,000 வரவு வைக்கப்பட்ட நிலையில், இத்திட்டத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கு SMS பெற முடியவில்லை என புகார் எழுந்துள்ளது. அதற்கு எளிய தீர்வு உள்ளது. ஒருவேளை நீண்ட நாட்களாக பயன்படுத்தாத வங்கிக் கணக்குகள் கொடுத்திருந்தால், உடனடியாக வங்கிக்கு சென்று சிறு தொகையை டெபாசிட் செய்து கணக்கை செயல்பாட்டிற்கு கொண்டு வரலாம். அதேபோன்று KYC விவரங்களையும் அப்டேட் செய்திருக்க வேண்டியது அவசியம்.
News February 15, 2026
திமுக ₹1 லட்சமே கொடுத்தாலும் ஓட்டு இல்லை: TTV தினகரன்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஓட்டுக்குப் பணம் கொடுத்து வென்றுவிடலாம் என திமுக நினைப்பதாக TTV தினகரன் கூறியுள்ளார். மாதம் ₹1 லட்சம் தருவதாகக் கூறினாலும் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற அவர், வரும் தேர்தலுடன் திமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்றார். மேலும், NDA ஆட்சி அமைந்தவுடன் பழங்குடி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.
News February 15, 2026
தமிழ் சினிமா பிரபலம் தமிழ் அழகன் காலமானார்!

பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான வீ. தமிழ் அழகன் வயது மூப்பு காரணமாக காலமானார். RM வீரப்பனின் மூத்த மகனான இவர், சத்யா மூவிஸ் மூலம் மூன்று முகம், காக்கி சட்டை, பணக்காரன், பாட்ஷா போன்ற மெகா ஹிட் படங்களை தயாரித்துள்ளார். மேலும், மந்திரப்புன்னகை, நிலாபெண்ணே போன்ற படங்களையும் தமிழ் அழகன் இயக்கியுள்ளார். இவரது மறைவுக்கு தமிழக திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP


