News January 10, 2026
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குக: தங்கம் தென்னரசு

டெல்லியில் நடைபெற்று வரும் மத்திய அரசின் பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில், சென்னை மெட்ரோ திட்டத்துக்கு பங்குத் தொகையாக ₹9,500 கோடியை விடுவிக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும், GST மூலம் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை குறைக்க இழப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News February 7, 2026
திங்கள் முதல் தொடங்கும் செய்முறைத் தேர்வுகள்!

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்.9 முதல் தொடங்குகின்றன. இதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 9 – 11 மணி, காலை 11.30 – மதியம் 1.30 மணி, மதியம் 2.30 – மாலை 4.30 மணி என 3 பிரிவுகளாக செய்முறைத் தேர்வுகளை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ALL THE BEST மாணவர்களே, கலக்குங்க!
News February 7, 2026
8 குழந்தைகள் உள்பட 24 பேரை கொன்ற கிளர்ச்சி படை!

சூடான் உள்நாட்டு போரால் இடம்பெயர்ந்த மக்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது RSF என்ற கிளர்ச்சி படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில், 8 குழந்தைகள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்த குழந்தைகளில் 2 பச்சிளம் குழந்தைகள் என்ற செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை உறுதி செய்துள்ள சூடான் டாக்டர்கள் குழு, மக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி சர்வதேச அமைப்புகளுக்கு வலியுறுத்தியுள்ளது.
News February 7, 2026
சிறிய அணியிடம் போராடி வென்ற பாகிஸ்தான்!

டி2O WC-ன் முதல் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய நெதர்லாந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து விளையாடிய பாக்., அணியில், ஃபர்ஹான்(47) மட்டுமே குறிப்பிடதக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி 2 ஓவர்களில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில், 19-வது ஓவரில் பஹீம் அஷ்ரஃப் 24 ரன்களை விளாசி ஆட்டத்தை பாக்., பக்கம் திருப்பினார்.


