News February 1, 2026

தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதி கிடைக்குமா? CM ஸ்டாலின்

image

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பல்வேறு கேள்விகளை CM ஸ்டாலின் எழுப்பியுள்ளார். மாணவர்களின் படிப்புக்கான ₹3,548 கோடி கல்வி நிதி, கோவை, மதுரை மெட்ரோ ரயில், மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு உள்ளிட்டவை இடம் பெறுமா? என கேட்டுள்ளார். தேர்தலை வருவதால் TN-க்கான அறிவிப்புகளைத் பட்ஜெட்டில் தவறாமல் இடம்பெறும் என எதிர்பார்பதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 8, 2026

பிப்.12-ல் நாடு தழுவிய ஸ்டிரைக்!

image

மத்திய அரசை கண்டித்து வரும் பிப்.12-ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக சிபிஎம், சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. மத்திய அரசின் 4 தொழிலாளர் விரோத சட்டங்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்டுள்ள போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். இதற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 8, 2026

தங்கம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

image

2026-ல் புதிய விதிகளின்படி, நகைகளை தாமதமாக விற்றால் உங்களின் வரிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது, வாங்கிய தங்கத்தை 2 ஆண்டுகளுக்கு பின் விற்பனை செய்தால், அது நீண்ட கால மூலதன ஆதாயமாக கருதப்பட்டு 12.5% வரி விதிக்கப்படும். முன்பிருந்த இண்டெக்சேஷன் பலன் இப்போது கிடையாது. அதேநேரத்தில், 2 ஆண்டுகளுக்குள் தங்கத்தை விற்றால் குறுகிய கால முதலீடாக கருதி, வருமான வரி வரம்புப்படி வரி வசூலிக்கப்படும்.

News February 8, 2026

விஜய் 72 நாள்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை: EPS

image

விஜய் ஊழல்வாதி என்பதற்கு வருமான வரி ஏய்ப்பு வழக்கில் கோர்ட் வழங்கிய தீர்ப்பே சாட்சி என்று EPS தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்திற்கு பிறகு வெளியே வரும் துணிவில்லாமல் 72 நாள்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தவர் விஜய் என தெரிவித்த அவர், தனது கட்சி அலுவலகத்தையே 15 நாள்களுக்கு மூடிவைத்ததாகவும் விமர்சித்துள்ளார். மேலும், தவெக என்ற கட்சி இருக்கிறதா, இல்லையா என்ற நிலைக்கு வந்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.

error: Content is protected !!