News December 23, 2025
தமிழ்நாட்டில் முதல்முறையாக நீலகிரியில்!

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாட்டின் முதல் நாய் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இது உதகை மரவியல் பூங்காவில் (Arboretum) அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா ரூ.42.30 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இங்கு பெரிய மற்றும் சிறிய நாய்களுக்கு தனித்தனி விளையாட்டு பகுதிகள் உள்ளன. நாய்கள் விளையாடுவதற்கும், பயிற்சி பெறுவதற்கும் தேவையான உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இது நாய்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருக்கும்.
Similar News
News December 28, 2025
பந்தலூரில் அதிகரிக்கும் நோய் தாக்குதல்!

நீலகிரிமாவட்டம் பந்தலூர் பகுதியில் மழைக்காலத்தில் பெய்த மழையில் விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்கு உரமிடுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக உறைபனியானது பெய்து வருகிறது.ஏற்கனவே உறைபனி தாக்குதலால் தேயிலை செடிகள் கருகி வரும் நிலையில் கொப்புள நொயும் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
News December 28, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

ஊட்டியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி,நகர்புற நல்வாழ்வு மையம்,சித்தா ஆகிய இடங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்படுகின்றன.இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.nilgiris.nic.in என்ற இணையத்தளபக்கத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து (6/1/26) மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகம், ஜெயில்ஹில் ரோடு, ஊட்டி என்ற முகவரியில் சமர்ப்பிக்குமாறு கலெக்டர் அறிவித்துள்ளார். SHARE IT
News December 28, 2025
நீலகிரி: பதிவு செய்தால் ரூ.5 லட்சம் கிடைக்கும்!

CMன் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். இதை SHARE பண்ணுங்க!


