News June 4, 2024

தமிழ்நாட்டில் பாஜக வாக்கு வங்கி 10%ஆக உயர்வு

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் கட்சிகள் வாங்கிய வாக்கு சதவிகித விவரம் வெளியாகியுள்ளது. திமுக 25.28%, அதிமுக 20.67%, காங்., 10.89%, பாஜக 10.89%, சிபிஎம் 3.56%, தேமுதிக 3.26%, சிபிஐ(எம்) 2.42% வாக்குகள் பெற்றுள்ளன. நோட்டா 1.07% பெற்றுள்ள நிலையில் மற்றவை – 21.15% வாக்குகள் கிடைத்துள்ளன.

Similar News

News August 27, 2025

ஷாருக்கான், தீபிகா படுகோன் மீது வழக்குப்பதிவு

image

ராஜஸ்தானில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், தீபிகா படுகோன் ஆகியோர் உட்பட ஹூண்டாய் நிறுவனத்தின் 6 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தான் வாங்கிய காரில் உற்பத்தி குறைபாடுகள் இருப்பதால் ஹுண்டாய் நிறுவனம் மற்றும் அதன் பிராண்ட் தூதர்கள் மீது ராஜஸ்தானை சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார். சட்டப்படி பிராண்ட் தூதர்கள் குறைபாடான பொருள்களை விளம்பரப்படுத்தினால் அவர்களுக்கும் அதில் பொறுப்புள்ளது.

News August 27, 2025

ஜாக் மாவின் பொன்மொழிகள்

image

✪ கனவுகளின் அழகை நம்புபவர்களுக்குதான் எதிர்காலம் சொந்தம்
✪ ஒரு விஷயத்தில் விடாப்பிடியாக இருந்தால் உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு
✪ உலகை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் வித்தியசமானவராக இருக்க வேண்டும்
✪ யோசனை எதுவென்பது முக்கியமல்ல; அது செயல்படுத்துவதுதான் கெட்டிக்காரத்தனம்
✪ உங்களுக்கு ஒரு கனவு இருந்தால், அதைப் பிடித்துக்கொண்டு ஒருபோதும் விடக்கூடாது.

News August 27, 2025

மேற்கு வங்க மக்கள் திருடர்களா? மம்தா பதிலடி

image

மாநில முதல்வருக்கு மரியாதை கொடுக்காமல், மேற்கு வங்க மக்கள் அனைவரும் திருடர்கள் என்பது போல் PM மோடி பேசியுள்ளதாக CM மம்தா குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் நிதியை TMC விழுங்கிவிடுவதாக மோடி விமர்சித்த நிலையில், PM இவ்வாறு பேசுவார் என எதிர்பார்க்கவில்லை என மம்தா கூறியுள்ளார். மத்திய அரசு உரிய நிதியை மாநிலத்துக்கு வழங்காமல் திருட்டுக் குற்றச்சாட்டை சுமத்துவதாகவும் சாடியுள்ளார்.

error: Content is protected !!