News November 26, 2025

தமிழ்நாட்டில் இப்போ இதுதான் TRENDING நியூஸ்

image

*அதிமுக MLA பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
*விஜய்யை சந்தித்து செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை.
*இந்தியா படுதோல்வி; ஒயிட்வாஷ் செய்த தென்னாப்பிரிக்கா
*<>இவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை ₹1,000<<>>

Similar News

News November 28, 2025

BREAKING: திமுக அமைச்சர் விடுவிப்பு

image

2006 – 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பன், வருவாய்க்கு அதிகமாக ₹1.20 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிந்தது. இதில் அவரது தாயார், மனைவி, மகன், மைத்துனர் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததாக கூறி, இவ்வழக்கை சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட் ரத்து செய்துள்ளது.

News November 28, 2025

உள்வாங்கும் சென்னை.. காத்திருக்கும் ஆபத்து

image

ஜனத்தொகை, நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சுவது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நிலம் உள்வாங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2015-2023 வரையிலான சாட்டிலைட் படங்களை ஆராய்ந்ததில் சென்னையில் 30 மி.மீ அளவிற்கு நிலங்கள் உள்வாங்கியுள்ளன. குறிப்பாக சென்னையில் அடையார், தண்டையார்பேட்டை, வளசரவாக்கத்தில் நிலம் உள்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

News November 28, 2025

சிரிக்கும் ரோஜா பிரியம்வதா கிருஷ்ணன்

image

மலையாளத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியம்வதா கிருஷ்ணன், ‘நரிவேட்டா’ படத்தில் வரும் மின்னல்வள பாடல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இவர், இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது சிவப்பு நிற ஆடையில் பதிவிட்டுள்ள போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. ரோஜா மலர் பிரியம்வதாவை பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.

error: Content is protected !!