News December 12, 2025
தமிழ்நாட்டில் இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!

செதுக்கப்பட்ட பழங்கால கோயில்கள், அழகிய கடற்கரை, மேகங்களுக்குள் மறைந்திருக்கும் சிகரங்கள் என தமிழ்நாட்டில் ஒவ்வொரு இடமும் ஒரு தனித்துவ அழகை கொண்டது. அந்த வகையில், நாம் வாழ்நாளில் நிச்சயம் பார்க்கவேண்டிய சில இடங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News December 13, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 13, கார்த்திகை 24 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.
News December 13, 2025
2 போட்டிகளை வைத்து கில்லை எடை போட முடியாது: நெஹ்ரா

SA-க்கு எதிரான டி20 தொடரில் கில் சொதப்பி வருகிறார். இது குறித்து GT கோச் நெஹ்ராவிடம் கேட்டபோது, டி20 போன்ற மிக குறுகிய ஃபார்மெட்டில், 2 போட்டிகளில் விளையாடுவதை வைத்து ஒரு வீரரை எடை போட கூடாது என தெரிவித்துள்ளார். கில் சரியாக ஆடவில்லை என சாம்சன், அவரும் ஆடவில்லை என ருதுராஜ் என வீரர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்க முடியாது என்றும் நெஹ்ரா கூறியுள்ளார்.
News December 13, 2025
₹1,020 கோடி ஊழல்.. “நேரு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்”

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்று அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். நகராட்சி நிர்வாகத்துறையில் ₹1,020 கோடி ஊழலும், அரசுப் பணி வழங்க ₹888 கோடி லஞ்சமும் வசூலிக்கப்பட்டது பற்றி DGP-க்கு, ED துல்லியமான ஆதாரங்களை கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் சாடியுள்ளார். ஊராட்சி செயலாளர் தேர்விலும், DMK அரசு தகுதியான இளைஞர்களை நீக்கி மோசடி செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


