News April 4, 2026
தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி.. அதிர்ச்சி அளிக்கும் கணிப்பு

ஏப்.23-ஐ நோக்கி அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், SM-ல் ஆற்காடு பஞ்சாங்கம் வைரலாகிறது. அதில், ‘2026 தேர்தலில் உலகளாவிய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் எதிர்பார்த்த வெற்றி யாருக்கும் கிடைக்காது. கூட்டணி ஆட்சி அமையும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ள கணிப்பு ஜெயிக்குமா? விடைக்காக அடுத்த மாதம் 4-ம் தேதி வரை காத்திருப்போம்.
Similar News
News April 9, 2026
EMI செலுத்துபவர்களுக்கு GOOD NEWS

<<19596140>>ரெப்போ<<>> வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என RBI அறிவித்தது. இருப்பினும், புதிய கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 89 அடிப்படை புள்ளிகளும், செயல்பாட்டிலுள்ள கடன்களுக்கு (active loans) 87 அடிப்படை புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதன்படி, மேலும் 36 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, 3 மாதங்களில் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. இதனால் வீடு & வாகனக் கடன்களுக்கு வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.
News April 9, 2026
ஹிஸ்புல்லா தலைவரை கொன்றுவிட்டோம்: இஸ்ரேல்

ஹிஸ்புல்லா தலைவர் ஷேக் நைம் காசிம் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையே 2 வாரங்களுக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தாலும், இது லெபனானுக்கு பொருந்தாது என நெதன்யாகு கூறியிருந்தார். <<19603510>>லெபனானில்<<>> உள்ள ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஷேக் நைம் காசிமை கொன்றுவிட்டோம் என இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால், அதனை ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தவில்லை.
News April 9, 2026
ஆண்களிடம் குறையும் பாலியல் உணர்வு..

வேலைப்பளு, மன அழுத்தம் உள்ளிட்ட சில காரணங்களால் ஆண்களிடம் பாலியல் உணர்வு(Libido) குறைந்து வருவது சமீபத்திய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. மனச்சோர்வால், குறிப்பாக இளைஞர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்து பாலியல் உந்துதலை நேரடியாக பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது. சத்தான சாப்பாடு, உடற்பயிற்சி, தூக்கம் மட்டுமே இதற்குத் தீர்வாக அமையும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். BE ALERT!


