News December 22, 2025
தமிழ்நாட்டிற்கு தனி கேரக்டர் உள்ளது: DCM உதயநிதி

மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமைக்கு எதிரான பாசிச கூட்டணியை மக்கள் நிச்சயம் முறியடிப்பார்கள் என உதயநிதி கூறியுள்ளார். தமிழ்நாட்டுக்கு தனி கேரக்டர் இருப்பதாக கூறிய அவர், கிறிஸ்துமஸுக்கு இஸ்லாமியர்களுக்கு கேக் அனுப்புவதும், ரம்ஜானுக்கு பிரியாணி வந்துவிட்டதா என பார்ப்பதும் தான் TN-ன் தனி குவாலிட்டி என பேசியுள்ளார். மேலும், சிறுபான்மையினருக்கு எதிரான சூழ்ச்சிகள் TN-ல் வெல்லாது எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 29, 2025
விரைவில் சென்னைக்கு வருகிறது IKEA

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பன்னாட்டு ஃபர்னிச்சர் நிறுவனம் தான் IKEA. ஏற்கெனவே இந்தியாவில் ஹைதராபாத், மும்பை, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இதன் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்நிறுவனம் சென்னையில் தன்னுடைய கடையை திறக்க முடிவு செய்துள்ளது. பொருளாதாரம், வேலைவாய்ப்பு, உற்பத்தி என சென்னை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், IKEA-வின் வருகை ஃபர்னிச்சர் துறையில் மிகப்பெரிய சர்வதேச முதலீடாக அமையும்.
News December 29, 2025
சீரியல் நடிகைகள் தற்கொலை.. தொடரும் சோகம்

சீரியல் நடிகைகள் தற்கொலை செய்வது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில், நடிகை ராஜேஷ்வரி உயிரிழந்த நிலையில், இன்று <<18703577>>மேலும் ஒரு சீரியல் நடிகை<<>> தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இதேபோல், இதற்குமுன் தற்கொலை செய்துகொண்ட சீரியல் நடிகைகளின் போட்டோக்களை, மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. தற்கொலை எதற்கும் தீர்வல்ல
News December 29, 2025
பிரவீன் சக்ரவர்த்திக்கு எதிராக தலைமையிடம் புகார்: SP

காங்கிரஸில் இருந்து கொண்டு பாஜகவின் குரலாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என <<18699142>>பிரவீன் சக்ரவர்த்தியை<<>> குறிப்பிட்டு செல்வப்பெருந்தகை காட்டமாக தெரிவித்துள்ளார். கடன் விவகாரத்தில் உ.பி., vs தமிழ்நாடு என எப்படி ஒப்பிட முடியும்? 4.6% கடனில் தமிழகத்தை விட்டுச்சென்றது அதிமுக. ஆனால் அது தற்போது 3% ஆக குறைக்கப்பட்டுள்ளது. <<18700197>>பிரவீன் சக்ரவர்த்தி<<>> குறித்து தலைமையிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் பேசியுள்ளார்.


