News September 17, 2025
தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய காஞ்சிபுரம்!

காஞ்சிபுரத்தில் 1925ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாகாண மாநாடு, காங்கிரஸ் தலைவர் திரு.வி.க தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தந்தை பெரியார் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வந்தார். இது கட்சியினரால் நிராகரிக்கப்பட்டது. அப்போது பெரியார், “காங்கிரசை ஒழிப்பதே இனி எனது வேலை” என கூறி வெளியேறினார். இதன் பிறகே, தி.க உருவாக்கப்பட்டது. பெரியார் பற்றிய உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்க.
Similar News
News September 17, 2025
காஞ்சிபுரம்: செல்வம் செழிக்க புரட்டாசியில் இங்கு போங்க!

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் அமைந்துள்ள திருஊரகப்பெருமாள் திருக்கோயில், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது. இங்கு அருள்பாலிக்கும் திருஊரகப்பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் மனமுருகி வழிபட்டால், கடன் தொல்லை நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பணக்கஷ்டத்திலும், கடனிலும் வாடும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News September 17, 2025
காஞ்சிபுரம்: மழையால் மின்தடையா? கவலை வேண்டாம்!

காஞ்சிபுரம் மக்களே! மழைக்காலம் தொடங்கி விட்டதால், இனிமேல் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும். சில சமயங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏற்படும். இது குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் என்ற 9498794987 எண்ணை தொடர்வு கொள்ளவும். இல்லையெனில் <
News September 17, 2025
காஞ்சிபுரத்தில் இன்று கரண்ட் கட்!

காஞ்சிபுரம், நீர்வள்ளூர் துணைமின் நிலையத்தில் இன்று (செப்.,17) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் நீர்வள்ளூர், சின்னையன் சத்திரம், ராஜகுளம், தொடுர், மேல்மதுரமங்களம், கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்களம், செல்வழிமங்களம், சின்னிவாக்கம், மருதம், பரந்தூர், சிறுவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE)