News March 4, 2026

தமிழ்நாடே திவால் ஆகப்போகிறது: விஜய்

image

TN-ல் இன்னும் கொஞ்ச காலத்தில் தண்ணீர் இல்லாமல் திவால் ஆகப் போவதாக செய்தி வந்துள்ளது என விஜய் கூறியுள்ளார். மணலைக் கொள்ளையடித்தால் வேற என்ன நடக்கும், மலைகளை முழுங்கினால் வேற என்ன நடக்கும் என கேள்வி எழுப்பிய அவர், மணல் மாஃபியாவுடன் திமுகவுக்கு உறவில்லை என்று சொல்ல முடியுமா என கேட்டுள்ளார். மேலும், ஒட்டுமொத்தமாக இந்த முதல்வரின் ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப் போகிறது என கூறியுள்ளார்.

Similar News

News April 4, 2026

நெல்லை: ரயில்வேயில் 2,801 காலிப்பணியிடங்கள்

image

ரயில்வேயில் AC Mechanic, Carpenter உள்ளிட்ட 2,801 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் ஏப்ரல் 11ம் தேதிக்குள் இங்கு<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். Merit List அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு http://www.scr.indianrailways.gov.in/ .

News April 4, 2026

BREAKING: தேர்தலில் இருந்து விலகினார் திருமாவளவன்

image

காட்டுமன்னார்கோவில் தொகுதியில், தான் போட்டியிடவில்லை என திருமாவளவன் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதவி மீது எனக்கு எப்போதுமே பெரிய பிடிப்பு இல்லை எனத் தெரிவித்தார். விசிக MLA-க்களுடன் தனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காகவே ஏற்கெனவே இருந்த MLA-க்கள் சிலருக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

News April 4, 2026

சுந்தர்.சி சொத்து விவரம் வெளியானது!

image

மதுரை மத்திய தொகுதி வேட்பாளரான சுந்தர்.சி தன்னிடம் ₹22.97 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். குறிப்பாக 220 கிராம் தங்கம் உள்பட ₹2.97 கோடி அசையும் சொத்துகளும், ₹20 கோடிக்கு அசையா சொத்துகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவி குஷ்புவிடம் 3.55 கிலோ தங்கம் உள்பட ₹6.06 கோடி அசையும் சொத்துகளும், ₹16.78 கோடிக்கு அசையா சொத்துகளும் உள்ளது. <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!