News April 28, 2025
தமிழ்நாடு ரிப்போர்டர் சங்கம் மாநில மாநாடு

தேனியில் தமிழ்நாடு ரிப்போர்டர் சங்கம் முதல் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில், பத்திரிகையாளர்களுக்கு அரசு சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் தேனி மாவட்ட தமிழ்நாடு ரிப்போர்டர் சங்கம் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News October 30, 2025
தேனியில் 13 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

பெரியகுளம் போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக நேற்று (அக்.29) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது எ.புதுப்பட்டி பிரிவு அருகே பையுடன் நின்று கொண்டிருந்த சீத்தாராமன் (61), முத்து (51) ஆகியோரை போலீசார் சோதனை செய்தனர். இந்த சோதனையில் அவர்கள் இருவரும் 13.401 கிலோ கஞ்சாவை வைத்திருந்தது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.
News October 30, 2025
தேனி: இ-ஸ்கூட்டர் வாங்க விண்ணப்பிப்பது எப்படி?

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 30, 2025
தேனி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

தேனி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.


