News September 12, 2025
தமிழ்நாடு முந்திரி வாரியம் அமைப்பு- அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியினை மேலும் அதிகரித்து, முந்திரி சாகுபடி செய்யும் உழவர்கள், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாத்திட ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ என்னும் தனி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வேளாண்மை – உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
கடலூர்: லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ; பறிபோன வேலை

குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் எஸ்.ஐ.ஆக பணிபுரிந்தவர் பாலசுந்தரம். இவர் கடந்த 7.3.2023 அன்று குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ஐயப்பன் என்பவரிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் மீது நடத்தப்பட்ட துறை ரீதியிலான விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நேற்று அவரை பணிநீக்கம் செய்து கடலூர் எஸ்.பி உத்தரவிட்டார்.
News September 13, 2025
கடலூர் அருகே இன்று வேலைவாய்ப்பு முகாம்

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இன்று (13.9.2025) பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வேலை தேடும் இளைஞர்கள் தங்களது கல்வி சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 04142-290039, 9499055907 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (செப்.13) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.