News April 15, 2025

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைவராகிறார் சுரேஷ் ராஜன்

image

தமிழக முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளருமான என்.சுரேஷ் ராஜன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைவராக நியமிக்கப்படுகிறார். இவர் நாளை பதவி பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் சென்னை புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் சென்னை புறப்பட்டுச் சென்றனர்.

Similar News

News April 16, 2025

கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறந்த உணவுகள் (பாகம் – 2)

image

கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறந்த உள்ளூர் உணவுகளாக கருதப்படும் இவை கேரள மாநிலத்தினுடன் ஒத்து போனது. ஆகையால் இது கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே கிடைக்க காரணமாக அமைந்துள்ளது.
▶️தேன் குழல்
▶️ஓலம்
▶️எரிசேரி
▶️கலத்தப்பம்
▶️நெய்அப்பம்
▶️அச்சப்பம்
▶️மடக்குசான்
▶️குழல் அப்பம்
▶️சுக்கப்பம்
▶️பூரியான்
▶️கிண்ணத்தப்பம்
▶️சக்கோலி

*ஷேர் பண்ணுங்க (இதில் விடுப்பட்ட ருசியான உணவுகளை நீங்கள் கூறலாம்)

News April 16, 2025

தபால் நிலையங்களில் 1.79 லட்சம் பேர் ஆதார் திருத்தம்

image

கன்னியாகுமரி மாவட்டம் தபால் நிலையங்கள் மூலம் ஆதார் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது .மேலும் சிறப்பு ஆதார் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில், குமரி மாவட்ட தபால் நிலையங்கள் மூலமாக ஆதார் பதிவு மற்றும் திருத்தச் சேவைகளை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 336 பேர் பெற்று பயனடைந்துள்ளதாக தபால் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர் பாஸ்போர்ட் சேவையினை 18,484 பேர் பெற்றுள்ளனர் என தெரிவித்தனர்.

News April 16, 2025

குமரி மாவட்டத்தில் 34 கோடியில் கால்வாய் சீரமைப்பு பணிகள்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை காலத்தை முன்னிட்டு அணைகள் மூடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கால்வாய் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.34 கோடி அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  ஜூன் 1-ம் தேதி அணைகள் பாசனத்திற்காக திறக்கப்படுவதற்கு முன்பு கால்வாய் சீரமைப்பு பணிகளை முடிக்க நீர் வள ஆதார அமைப்பு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!