News August 5, 2024
தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு ஆட்சியர் அழைப்பு

அனைத்து சுற்றுலா தொழில்முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று (27.09.2024) சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்:20.08.2024 ஆகும்.
Similar News
News February 1, 2026
செங்கல்பட்டு தாய்மார்களுக்கு ரூ.11,000

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது <
News February 1, 2026
செங்கல்பட்டு: கர்ப்பமான பிளஸ்-1 மாணவி சாவு

செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் ஊராட்சியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பரிசோதத்தில் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. மேலும், அவருக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
News February 1, 2026
செங்கல்பட்டு ஆட்சியர் கறார்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிப்ரவரி 1 இன்று ராமலிங்க அடிகளார் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, டாஸ்மார்க் மதுபான கடைகள் திறக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கறாராக கூறியுள்ளார். நினைவு தின நிகழ்வுகள் அமைதியாக நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


