News November 14, 2024
தமிழ்நாடு அளவிலான கிரிக்கெட் போட்டியில் செங்கல்பட்டு மாணவி

கோவளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி நளிணா, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிக்கு தமிழ்நாடு அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவரை மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ், நேரில் அழைத்து, பாராட்டி விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News March 2, 2026
செங்கல்பட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் மக்களுக்கு சைபர் கிரைம் மோசடியை தவிர்க்க சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தங்களது ஆன்லைன் காண பரிவர்த்தனைகளில் உள்ள கடவுச்சொல் (UPI PIN) – யை அடிக்கடி மாற்றியமைப்பதன் மூலமாக சைபர் மோசடியை தவிர்க்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 2, 2026
செங்கல்பட்டு: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 2, 2026
செங்கல்பட்டு: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

செங்கல்பட்டு மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <


