News December 23, 2024
தமிழ்நாடு அரசு நலிந்தோர் குடும்ப நல நிதி

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத் நகர் பகுதியை சேர்ந்த கவிதா அவர்களுக்கு தமிழ்நாடு அரசு நலிந்தோர் குடும்ப நல நிதி உதவி திட்டத்தின் கீழ், இயற்கை மரண நிவாரண உதவி தொகை ரூபாய் 20,000/- ஆணையினை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 24, 2025
வேலூரில் இலவச கண் பரிசோதனை முகாம்

வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து குடியாத்தம், காட்பாடி ரோடு, இராஜா கோயில் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள ஆர்.ஜி.டி திருமண மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் 2 மணி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
News August 24, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணியில் தீவிரம்

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் 23.08.2025 இரவு ரோந்து பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளன. மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு தலைமையில், வேலூர், காட்பாடி, குடியாத்தம், அணைக்கட்டு பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இந்த பணி நடக்கிறது.
News August 23, 2025
வேலூர்: இனி வீட்டில் இருந்தே வரி செலுத்தலாம்

வேலூர் மக்களே இனி வீட்டு வரி செலுத்துவது (அ) ரசீது பெறுவது தொடர்பாக அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த <