News February 13, 2026
தமிழ்நாடுதான் என்னுடைய வீடு: விஜய்

’ஏய் விஜய் வீட்டு விட்டு வெளியே வா’ என சொல்பவர்களுக்கு என் வீடு எங்கிருக்கிறது என தெரியுமா என விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். தாய் நாடான தமிழ்நாடு மற்றவர்களுக்கு மாநிலமாக இருக்கலாம் ஆனால் தனக்கு அதுதான் வீடு என்ற அவர், 8 கோடி மக்கள் தன்னுடைய குடும்பத்தினர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், TN-ன் முதல் படைவீரனாக, பாதுகாவலனாக மக்களுடன் நிற்கவேண்டும் என்பதே தனது குறிக்கோள் எனவும் அவர் பேசியுள்ளார்.
Similar News
News February 15, 2026
செங்கல்பட்டு: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள்.விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News February 15, 2026
சூசகமாக அதிக சீட் கேட்ட GK வாசன்.. இப்படி கூறியிருக்கிறார்

NDA கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும் என GK வாசன் தெரிவித்துள்ளார். அதற்கு பின் சீட் ஷேரிங், வேட்பாளர்கள் அறிவிப்பு நடக்கும் என்ற அவர், TN பேரவையில் 4 மண்டலங்களில் இருந்தும் தமாகாவின் குரல் ஒலிக்க வேண்டும் என சூசகமாக கூறியுள்ளார். NDA-வில் GK வாசனுக்கு 1 சீட் மட்டுமே ஒதுக்க அதிமுக திட்டமிடுவதாக பேசப்பட்ட நிலையில், இவர் தற்போது 1+ சீட் வேண்டும் என சூசகமாக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News February 15, 2026
முதல்வர் ஸ்டாலினின் அடுத்த அறிவிப்பு

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 1 லட்சம் இலவச வீடுகள் கட்டித்தர ₹3,500 கோடி நிதி ஒதுக்கி TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, ➤பயனாளி வறுமை கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும் ➤சொந்தமாக பட்டா நிலம் இருக்க வேண்டும் ➤பழைய குடிசை/ஓட்டு வீடுகளில் வசிப்பவராக இருக்க வேண்டும் ➤அரசின் இதர வீட்டு வசதி திட்டங்களில் பயனடைந்திருக்க கூடாது ➤ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.


